கனடாவில் ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கனடாவின், சஸ்கற்றுவானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.தகவல் கிடைத்து அதிகாரிகள் சென்று பார்த்தவேளை நால்வர் இறந்து கிடந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த சடலங்கள் மீட்கப்பட்டமையால் பொதுமக்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் இருப்பதாக தாங்கள் நம்பவில்லை என்றும், அவ்வாறு தெரியவந்தால் பொது எச்சரிக்கையை வெளியிடுவோம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
Leave a Reply