முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வவுனியாவில் விபத்தில் பலி !

முல்லைத்தீவில் இருந்து வவுனியா நோக்கிபயணித்துக்கொண்டிருந்த வைத்திய அதிகாரியின் வாகனம் ஓமந்தை பகுதியில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்துகொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன் மோதியதில் விபத்து இடம்பெற்றது.

விபத்தில் வைத்தியர் பயணித்த வாகனம் கடும் சேதமடைந்ததுடன் அதனைச்செலுத்திச்சென்ற வைத்தியர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்றிரவு 07 மணியளவில் மரணமடைந்தார்.

சம்பவத்தில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளரும் முன்னாள் வவுனியா வைத்தியசாலை பணிப்பாளருமான வைத்தியர் கு.அகிலேந்திரன் அவர்களே மரணமடைந்துள்ளார்.