ஒன்றாரியோ மற்றும் மொன்றியாலில் பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
அண்மைய நாட்களில் வாகனத் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
வாகனக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒன்றாரியோ மற்றும் மொன்றியல் காவற்துறையினர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கூட்டு ஊடக சந்திப்பு ஒன்றும் நடத்தப்பட்டது. நாட்டின் பல பகுதிகளில்; குறித்த கும்பல் வாகனக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஒன்றாரியோவில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
Leave a Reply