கனடாவில் சிறுவனுக்கு வைன் விற்று சிக்கலில் மாட்டிய சங்கிலி நிறுவனம்!

கனடாவில் சிறுவன் ஒருவனுக்கு வைன் விற்பனை செய்த பிரபல நிறுவனமொன்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் முன்னணி பல்பொருள் விற்பனை சங்கிலி நிறுவனங்களில் ஒன்றான லொப்லொவ் (Loblaws) நிறுவனம் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமது நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் 16 வயது சிறுவனுக்கு வைன் விற்பனை செய்ததனை அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தின் சர்ரே பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறுவனுக்கு வைன் விற்பனை செய்த குற்றத்திற்காக ஏழாயிரம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இள வயதினருக்கு மதுபானம் விற்பனை செய்பய்படுகின்றதா என்பது குறித்து கண்காணிக்கப்பட்டுள்ளது.

இதன் போது வைன் கொள்வனவு செய்த 16 வயது சிறுவனிடம் ஆள் அடையாள ஆவணங்களை காசாளர் கோரவில்லை எனவும், குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் குறித்த நிறுவனம் மீது இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது