அல்பேர்ட்டாவில் வெளிநாட்டவர்களுக்கான தொழில் வாய்ப்பும் நிரந்தர வதிவுரிமையும்!

மாகாணத்தில் விருந்தோம்பல் தொழிற்துறையில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட உள்ளன.

எதிர்வரும் 2035ம் ஆண்டளவில் மாகாணத்தின் சுற்றுலா கைத்தொழிற்துறையை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அல்பேர்ட்டா மாகாணம் இதற்கென பிரத்தியேகமான ஓர் குடிவரவு திட்டமொன்றை அறிமுகம் செய்ய உள்ளது.

விருந்தோம்பல் தொழிற்துறைசார் தகுதியுடைய வெளிநாட்டவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் வகையில் இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

கனடாவில் ஏற்கனவே தற்காலிக அடிப்படையில் சுற்றுலாத்துறை தொழில்களில் ஈடுபட்டு வரும் வெளிநாட்டுப் பிரஜைகள், நிரந்தர வதிவுரிமை பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளது.

விருந்தோம்பல் மற்றும் சுற்றலாத்துறையில் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் பணியாற்றிய வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு நிரந்தர வதிவுரிமைக்காக விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது.